Type Here to Get Search Results !

இலவச 4K டிவி - Jio - வின் அடுத்த அதிரடி!








இந்த சேவையின் கீழ் 100 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் அனைத்து ஜியோ ஆப்களும் முற்றிலுமாக இலவசம்.

சந்தையில் நுழைந்து, குறுகிய காலத்திற்குள்ளாகவே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஜியோ நிறுவனம், அதன் அடுத்த அதிரடியை இப்போது அறிவித்துள்ளது. அது, பிராட்பேண்ட் சேவைதான். ஜியோ ஜிகா ஃபைபர் என்று பெயரிடப்பட்ட பிராட்பேண்ட் சேவை குறித்து கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அது கூடிய விரைவில் மக்கள் அனைவரின் பயன்பாட்டுக்கும் வரவுள்ளது. இதுகுறித்து இன்றைய ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் (Annual General Meeting) அறிவித்தார், முகேஷ் அம்பானி.


100 Mbps முதல் 1 Gbps வரை கிடைக்கும் இந்த ஜியோ ஃபைபர் சேவைகள், செப்டம்பர் 5 முதல் கிடைக்கும். குறைந்தபட்சமாக 700 ரூபாய் காட்டினால் இந்தச் சேவையைப் பெறமுடியும். அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை சேவைகள் இருக்கின்றன. 700 ரூபாய்க்கு 100 Mbps-ல் உங்களால் பிராட்பேண்ட் சேவையைப் பயன்படுத்தமுடியும். 10,000 ரூபாய் சேவையில் ஜியோ பிராட்பேண்டுடன் ஜியோ HomeTV, ஜியோ IoT போன்ற ஆடம்பர சேவைகளும் கிடைக்கும்.



லேண்ட்லைன் சேவைகளும் குறைந்த விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ISD அழைப்புகளுக்கு, தற்போதைய சந்தை விலையில் 1/10 மடங்குதான் ஜியோவில் செலுத்தவேண்டியதிருக்கும். அன்லிமிடெட் அமெரிக்கா மற்றும் கனடா அழைப்புகளுக்கு 500 ரூபாய் பேக் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது, ஜியோ.

மேலும், நீண்டகால சேவைகளைப் (Jio Forever Plan) பெறுவதாக இருந்தால், இலவச 4K LED டிவியும், 4K செட்-அப் பாக்ஸும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது, எந்த பிராண்ட் டிவி என்றும் இதற்குத் தனியாக டெபாசிட் ஏதேனும் செலுத்த வேண்டுமா என்பது,குறித்த தெளிவான தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. அவை விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.




மேலும், திரைப்படங்கள் வெளியாகும் அன்றே அதை விலைகொடுத்துப் பார்க்கும் Jio FDFS பற்றியும் இதில் அறிமுகம் கொடுக்கப்பட்டது. இது எப்படி செயலுக்கு வரும் என்பதைப் பற்றியும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும், பிராட்பேண்ட் சேவையுடன் வரும் டிஜிட்டல் டிவி, கிளவுட் கேமிங் போன்ற மற்ற சேவைகள்குறித்தும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், புதிய ஸ்டார்ட்-அப்களுக்கு இலவச இணைய மற்றும் கிளவுட் சேவைகளைத் தரப்போவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். இவர்களின் மிக்ஸட் ரியாலிட்டி ஸ்டார்ட்-அப்பான Tesseract-ன் சாராம்சம் என்ன என்பதும் விளக்கப்பட்டது.


Top Post Ad

Below Post Ad