Type Here to Get Search Results !

இந்த ஏழு தவறுகளைச் செய்திருந்தால், உங்களுக்கும் வருமான வரி நோட்டீஸ் வரலாம்..!


வரும் ஆகஸ்ட் 31, 2019-க்குள் வருமான வரி படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை இப்போதே வருமான வரிப் படிவங்களை எல்லாம் தாக்கல் செய்துவிட்டீர்கள் என்றால் கூட, அவைகளை திருத்தம் செய்ய வரும் ஆகஸ்ட் 31, 2019 வரை நேரம் இருக்கிறது.





சரி வருமான வரி தாக்கல் செய்யும் போது இந்த தவறுகளைச் செய்யாமல் உஷாராக இருங்கள். இல்லை என்றால் வருமான வரித் துறையிடம் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வரும். ஒருவேளை கீழே சொல்லி இருக்கும் தவறுகளைச் செய்திருந்தீர்கள் என்றால் ஆடிட்டர்களைப் பார்த்து உங்கள் தவறுகளைச் சரி செய்து கொள்ளுங்கள்.





1. படிவம் 26AS மற்றும் படிவம் 16-ல் குறிப்பிட்டிருக்கும் வருமானத்தை ஒழுங்காக கணக்கில் வரும் படி வருமான வரி தாக்கல் செய்வது. (இதில் நம்முடைய வருமான வரிச் சட்டங்களுக்கு உட்பட்ட கழிவுகளாக இருந்தால் கூட அவைகள் படிவம் 26AS மற்றும் படிவம் 16-ல் கொண்டு வர வேண்டியது நம்முடைய பொறுப்பு தான்)





2. படிவம் 26AS-ல் இருக்கும் விவரங்கள் தவறாக இருந்தால் அவைகளை திருத்தம் செய்து வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்வது.





3. எல்லா வங்கிக் கணக்குகளையும் முறையாக வருமான வரித் துறையிடம் தெரிவிப்பது.





4. நம் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணம் அல்லது மற்ற வருமான வரிச் சட்டத்தின் படி செய்த பிடித்தங்களில் தவறான டான் எண் (Tan Number) குறிப்பிட்டிருந்தால், அதை கவனித்து திருத்திக் கொள்வது.





5. தவறான வருமான வரிப் படிவங்களை பூர்த்தி செய்துவிட்டால் அதை கண்டு பிடித்து, சரியான வருமான வரிப் படிவங்களில் வருமான வரிப் தாக்கல் செய்து கொள்வது.





6. பட்டியலிடப்படாத பங்குகளில் செய்திருக்கும் முதலீடுகளை முழுமையாக வருமான வரித் துறையினருக்கு முறையாக தெரியப்படுத்துவது.





7. வங்கி வட்டி வருமானங்களை எதார்த்தமாக கணக்கில் சேர்க்காமல் போவது அல்லது வங்கியில் நம் பெயரில் போட்டு வைத்திருக்கும் வைப்புத் தொகைக்கு கிடைக்கும் வட்டி வருமானத்தை கணக்கில் கொண்டு வராமல் விடுவது.





போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கவும். எனவே மேலே சொன்ன 7 விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி, வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வருவதை தடுத்துக் கொள்ளுங்களேன்



Top Post Ad

Below Post Ad