Type Here to Get Search Results !

அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!




காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவரது சிலை இன்று கோவில் குளத்துக்குள் வைக்கப்டுகிறது



காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அதன்படி, கடந்த ஜூலை மாதம் 1- ஆம் தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இறுதி நாளான நேற்று பொதுதரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.


ஜூலை 31 ஆம் தேதிவரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், அதன்பிறகு நின்ற கோலத்தில் அருள்பாலித்து வந்தார். 1 கோடிக்கும் அதிகமானோர் அத்திவரதரை தரிசித்து உள்ளனர். நேற்று இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது. இன்று அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை தொடங்குகிறது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்படுகிறது. இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. பிறகு குளத்தில் நீர் நிரப்பப்படும்.

Top Post Ad

Below Post Ad