வருமான வரி சீசன் அடுத்த சில நாட்களில் முடியப் போகிறது. பலரும் தங்கள் வருமான வரிப் படிவத்தை சமர்ப்பித்துவிட்டார்கள். ஆனால் அதற்குள்ளேயே தங்கள் வருமான வரி ஸ்டேட்டஸ் பற்றி இணையத்தில் பெரிதாக பேசத் தொடங்கிவிட்டார்கள் நம் மக்கள். ஆக இந்த கட்டுரையில் நம் ஸ்டேட்டஸை எப்படிப் பார்ப்பது, நம் ஸ்டேடஸ் என்னவாக இருக்க வேண்டும். அதில் E verification எவ்வளவு முக்கியமான பங்கு வகிக்கிறது போன்ற விவரங்களை விரிவாகப் பார்க்கப் போகிறோம். வாருங்கள் ஸ்டேட்டஸை எப்படிப் பார்ப்பது..? என்கிற கேள்வியில் இருந்தே தொடங்குவோம்.
ஸ்டெப் 1
முதலில் https://www.incometaxindiaefiling.gov.in/home லிங்கை சொடுக்கவும். அதன் பின் Registered User? என்கிற ஆப்ஷனுக்குக் கிழ் Portal Login என்கிற பட்டனை சொடுக்கவும். மீண்டும் Go to Portal Login பட்டனை க்ளிக் செய்யவும். உள்ளே சென்ற உடன் நம் யூசர் ஐடி கேட்கும். நம் பான் அட்டை தான் நம் யூசர் ஐடி. நம் பாஸ்வேர்ட், கேப்சா போன்ற தேவையான அனைத்து விஷயங்களையும் நிரப்பி லாக் இன் செய்யவும்.
ஸ்டெப் 2
உள்ளே சென்றதும் Filing of Income tax Returns மற்றும் View Returns / Forms என இரண்டு ஆப்ஷன் இருக்கும். அதில் View Returns and form-ஐ க்ளிக் செய்யவும். அதன் பின் நம் பான் அட்டை எண் முதலில் காட்டப்படும். அதன் பின் Select an option-ல் Income tax returns-ஐ தேர்வு செய்து சமர்பிக்கவும். அதன் பின் நம் பான் அட்டை, அசேஸ்மெண்ட் ஆண்டு (நிதி ஆண்டுக்கு அடுத்த ஆண்டு), எந்த ஐடிஆர் படிவம், எந்த வருமான வரிப் படிவத்தை சமர்பித்தோம், நாம் தாக்கல் செய்த வருமான வரிப் படிவம் ஒரிஜினலா அல்லது ரிவைஸ் செய்தவையா, வருமான வரிச் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்தோம், நாம் வருமான வரி சமர்பித்ததற்கான அத்தாஅட்சி எண் மற்றும் ஸ்டேட்டல் கொடுக்கப்பட்டு இருக்கும். பொருள் சரி இந்த வருமான வரி ஸ்டேட்டஸ் என்றால் என்ன..? நாம் செலுத்திய வருமான வரிப் படிவத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் ப்ராசெஸ் செய்து முடித்துவிட்டார்களா..? என்று பார்ப்பது தான் இந்த வருமான வரி ஸ்டேட்டஸ். சுருக்கமாக நாம் ஹோம் வொர்க் செய்தால் ஆசிரியர் சரி பார்ப்பாரே அது போன்ற வேலை தான் இதுவும். சரி இந்த ஸ்டேட்டஸ் என்னவாக இருக்க வேண்டும்..? ஸ்டேட்டஸின் கீழ் ITR Processed என்று வரும் வரை வருமான வரிப் படிவம் தாக்கல் செய்யும் வேலை முடியவில்லை. ஆக நம் ஸ்டேட்டஸை ITR Processed என்றும் வருவதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். என்ன செய்ய வேண்டும் ஒருவர் வருமான வரிப் படிவத்தை சமர்பித்துவிட்டார். ஆனால் E Verification செய்யவில்லை என்றால், அவருடைய ஸ்டேட்டஸ் Returns Uploaded, Pending for ITR - V / E Verification என இருக்கும். எனவே கட்டாயமாக E verify செய்ய வேண்டும். இப்போது நமக்கு இன்னொரு கேள்வி வரும். நம் வருமான வரிப் படிவத்தை எப்படிE verify செய்வது..? நாம் ஸ்டேட்டஸ் பார்க்கிறோம் இல்லையா அந்த அட்டவணைக்கு மேலேயே பச்சை நிறத்தில் Click here to view your returns pending for e verification என குறிப்பிட்டு இருப்பார்கள்.
ஸ்டெப் 3
மேலே சொல்லி இருக்கும் Click here to view your returns pending for e verification என்கிற பட்டனை அழுத்தினால், மீண்டும் நம் பான் அட்டை, அசேஸ்மெண்ட் ஆண்டு (நிதி ஆண்டுக்கு அடுத்த ஆண்டு), எந்த ஐடிஆர் படிவம், என்று வருமான வரிப் படிவத்தை சமர்பித்தோம், நாம் தாக்கல் செய்த வருமான வரிப் படிவம் ஒரிஜினலா அல்லது ரிவைஸ் செய்தவையா, நாம் வருமான வரி சமர்பித்ததற்கான அத்தாட்சி எண் மற்றும் ஸ்டேட்டஸ், E verify என வரிசையாக கொடுக்கப்பட்டு இருக்கும். ஒருவேளை நாம் e verify செய்துவிட்டோம் என்றால் இந்த Click here to view your returns pending for e verification என்கிற பட்டனை அழுத்தி உள்ளே சென்றால் No returns pending for e-verification என வரும்.
ஸ்டெப் 4 Click here to view your returns pending for e verification என்கிற பட்டனை அழுத்தி உள்ளே சென்ற உடன், ஸ்டேட்டஸ் ITR filed எனக் குறிப்பிடப்பட்டு, e verify என்கிற சொல் சிவப்பு நிறத்தில் இருந்தால் நாம் இன்னும் வருமான வரிப் படிவத்தை e verify செய்யவில்லை என்று பொருள். மேற்கொண்டு e verify செய்ய சிவப்பு நிறத்தில் இருக்கும் e verify என்கிற வார்த்தையை சொடுக்கவும். அதன் பின் நம் பான் அட்டை, அசெஸ்மெண்ட் ஆண்டு, வருமான வரி படிவத்தின் எண், வருமான வரி தாக்கல் செய்ததற்கான அத்தாட்சி எண் போன்றவைகள் வரும். அதற்குக் கீழ் e verify செய்ய மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
ஸ்டெப் 5 அதில் ஆதார் அட்டையில் கொடுத்திருக்கும் ஃபோன் நம்பருக்கு ஓடிபி மூலமாக e verify செய்கிறேன் என மூன்றாவது ஆப்ஷன் இருக்கும். அதை சொடுக்கவும். 'அதன் பின் ஆதார் ஓடிபி ஜெனரேட் செய்ய விரும்புகிறேன்' என்பதை சொடுக்கவும் (I would like to generate aadhar otp now). அதை சொடுக்கவும். அதன் பின் நம் ஆதார் அட்டையில் கொடுத்திருக்கும் போன் நம்பருக்கு ஒரு ஆதார் ஓடிபி வரும். அந்த ஓடிபி-யை டைப் செய்ய ஒரு காலி இடம் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த இடத்தில், நமக்கு வந்த ஆதார் ஓடிபியை நிரப்பி, கீழே I agree to validate my aadhaar details with uidai என்கிற ஆப்ஷனையும் டிக் செய்து சமர்பிக்க வேண்டும்.
ஸ்டெப் 6 நம் மொபைல் ஃபோனுக்கு வந்த ஓடிபியை முறையாக சமர்பித்த பின்னர் தான் நாம் முழுமையாக வருமான வரி தாக்கல் செய்ததாக பொருள். இதையும் நாம் மீண்டும் சரி பார்த்துக் கொள்ளலாம். அதற்கு, e verify செய்து சில நாட்கள் பிறகு மீண்டும் ஸ்டேட்டஸை செக் செய்தால் நம் வருமான வரிப் படிவத்துக்கு e verified என இருக்கும். மீண்டும் சில நாட்கள் கழித்துப் ஸ்டேட்டஸைப் பார்த்தால் E Verification Accepted என்று வரும். அடுத்த சில நாட்கள் கழித்துப் பார்த்தால் ITR Processed என்று வரும். அதாவது நம் வருமான வரிப் படிவம் தொடர்பாக அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது என்று பொருள். கவனம் மக்களே ஆக நாம் வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்துவிட்டு எனக்கு என்ன என்று ஜாலியாக இருக்க முடியாது. கொஞ்சம் இந்த ஸ்டேட்டஸ் விஷயங்களையும் கவனியுங்கள். அது தான் நம் எதிர்காலத்துக்கு நல்லது. ஒருவேளை நீங்கள் e verification செய்ய மறந்தால், உங்கள் வருமான வரிப் படிவம் ப்ராசெஸ் செய்யப்படாது. ப்ராசெஸ் செய்யப்படவில்லை என்றால் நீங்கள் வருமான வரி செலுத்தியதாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதன் பின் வழக்கம் போல வருமான வரித் துறையில் இருந்து நமக்கு நோட்டீஸ் வரும்