Type Here to Get Search Results !

இன்றைய முக்கிய செய்திகள் -06.10.2019

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்த, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்திய அணி சார்பில் முகமது ஷமி, டெஸ்ட் அரங்கில் ஐந்தாவது முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார்.
அஸ்வின் அதிவேகமாக 350 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

“சிறுபான்மையினரின் சொர்க பூமி இந்தியா, பாகிஸ்தான் நரகம்” எனச் சென்னையில் மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக இந்த கருத்தை அமைச்சர் பதிவு செய்தார்.
சென்னை தி.நகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கடன் வழங்கும் திட்டம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேகதாதுவில் அதைக்கட்டுவதன் மூலம் 4 ஆயிரத்து 996 ஹெக்டேட் நிலப்பரப்பு மட்டுமே நீரில் மூழ்கும். குறிப்பாகத் தமிழகத்துக்கு வழங்கப்படும் நீரை வழங்கவே இப்போது அணைக் கட்டுவதால் உறுதியாக உள்ளோம் எனக் கூறி கர்நாடகா மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும், மேகதாதுவில் அணைக்கட்ட அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் கருத்து தேவையில்லை எனத் திட்டவட்டமாக மீண்டும் கர்நாடகா மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 
கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என்ற மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு, இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்
இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுக்களை ஏ.டி.எம் மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்லைப்பிடாரி அம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்ற ஆண்களுக்கு, 100 கிடா பலி கொடுத்து உணவு அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஆண்கள் மட்டும் வழிபடும் விநோத திருவிழா நடைபெறுகிறது.
மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 100 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. 

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 21 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் சிவசேனை கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் களம் காண்கின்றன.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் தற்பாதுகாப்புக்காக தனிநபர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் எதிர்விளைவாக, துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தனிநபர்கள் அவ்வப்போது அரங்கேற்றி வரும் கொடூரமும் அங்கு தொடர் நிகழ்வாக உள்ளது. இன்றும் அப்படியொரு சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது 


Top Post Ad

Below Post Ad