*தமிழகம் முழுவதும் 8 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது
*பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது
*முதலமைச்சர், அமைச்சர் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிப்பு
*போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்- போராட்டக்குழு
இதனையடுத்து
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் பணி முறிவு உத்தரவு திரும்ப பெறப்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்.
அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்ட மருத்துவர்களுக்கு நன்றி எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.