சென்னையின் சுற்றுலா தலங்களில் ஒன்றான வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு ஓய்வு தரும் விதமா கவும், பராமரிப்புக்காகவும் செவ்வாய்க்கிழமைதோறும் விடுமுறை விடப்படுகிறது.
இந்நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை (8ம் தேதி) செவ்வாய்க்கிழமையில் வருகிறது. நவராத்திரி மற்றும் அரசு விடுமுறை என்பதால் அன்று அதிக அளவில் மக்கள் பூங்காவுக்கு வருவார்கள். எனவே, வரும் 8ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும். கிண்டி சிறுவர் பூங்காவிலும் அன்று பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்