Type Here to Get Search Results !

இனி இலவசம் கிடையாது - ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா !








இனி ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். அதேவேளை, ஜியோ டூ ஜியோ அழைப்புகள் முற்றிலும் இலவசம் எனவும், அழைப்பு கட்டணத்திற்கு ஏற்ப கூடுதலாக டேட்டா வழங்கவும் ஜியோ முடிவெடுத்துள்ளது.



நாடு முழுவதும் அனைத்து நெட்வொர்கிற்கும் இலவச அழைப்புகள் என்ற அறிவிப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ கடந்த செப்டம்பர் 2016ங முதல் இலவசமாக அழைப்புகளை வழங்கி வந்தது. இந்நிலையில், இன்றைக்கு வெளியிட்ட அறிக்கையில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அழைத்தால் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

இவை Non-jio வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல், சந்தையிலிருந்து வெளியேறிய ஏர்செல் போன்ற நிறுவனங்கள் ஜியோ வருகைக்குப் பின்னர் கடுமையான நிதி சிக்கலில் தவித்து வருகின்றது.


மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான ட்ராய் இடம் அவர்கள் புகார் அளித்தனார். அந்த புகாரின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவிற்கு ட்ராய் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.


ஜியோ சிம் கார்டில் இருந்து மற்றொரு ஜியோ சிம்மிற்கு போன் செய்தாலோ, லேன் லைண்ட்க்கு போன் செய்தாலோ இந்த கட்டணம் கிடையாது. அதேபோல், வாட்ஸ் அப், பேஸ்டைம் உள்ளிட்ட கால்களுக்கும் கட்டணம் கிடையாது. வழக்கம் போல் மற்ற நெட்வொர்கில் இருந்து வரும் கால்கள் இலவசம்தான்.


ஏற்கெனவே ஜியோவின் வருகையால் சரிவை சந்தித்து வந்த மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு, 'ரிங்' ஆகும் நேரத்தை ஜியோ குறைத்தத்து கோபத்தை மூட்டியது. ரிங் ஆகும் நேரத்தை குறைத்ததால் மற்ற நெட்வொர்க் கால்கள் மிஸ்டு கால் ஆக மாறி ஜியோ வாடிக்கையாளர் அவுட் கோயிங் செய்யும் நிலை உருவாகும்.





ஜியோவில் இருந்து இன் கம்மிங் கால் வந்தால் அதனை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் 6 பைசா கொடுக்க வேண்டியிருக்கும். இதுகுறித்து, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான ட்ராய் இடம் அவர்கள் புகார் அளித்தனார். அந்த புகாரின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவிற்கு ட்ராய் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.











இந்நிலையில், ஒரு போன் காலுக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. ட்ராய் நிறுவனத்தின் வலுக்கட்டாயமான அறிவுறுத்தலை அடுத்து ஜியோ இந்த முடிவை எடுத்துள்ளது.





இதுதொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தகவலின்படி, ஜியோ சிம் கார்டில் இருந்து மற்றொரு ஜியோ சிம்மிற்கு போன் செய்தாலோ, லேன் லைண்ட்க்கு போன் செய்தாலோ இந்த கட்டணம் கிடையாது. அதேபோல், வாட்ஸ் அப், பேஸ்டைம் உள்ளிட்ட கால்களுக்கும் கட்டணம் கிடையாது. வழக்கம் போல் மற்ற நெட்வொர்கில் இருந்து வரும் கால்கள் இலவசம்தான்.











இருப்பினும், வாய்ஸ் கால்க்கு செலுத்தும் இந்த கட்டணத்திற்கு இணையாக டேட்டா இலவசமாக வழங்கப்படும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது




Top Post Ad

Below Post Ad