டெல்லியில் ஏற்பட்டுள்ள கடும் மாசுப்பாடு அடுத்து சென்னையையும் பாதிக்க உள்ளதாக என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி கூறிய அவர் ’இதுநாள் வரை சென்னையில் காற்று மாசு இல்லை. இதற்கு முக்கிய காரணம் சென்னையில் உள்ள கடற்பகுதி. வடகிழக்கு பருவமழையும் காற்று மாசு ஏற்படாமல் காக்கும். ஆனால், இம்முறை மழை தடைப்பட்டுள்ள சமயத்தில் இந்த காற்று மாசு ஏற்பட்டுள்ளதால், சென்னையையும் இது பாதிக்க வாய்ப்புள்ளது. காற்றின் தரம் 200 - 200 வரை உயர வாய்ப்புள்ளது’ எனக் கூறியுள்ளார்.