Type Here to Get Search Results !

யூடியூப் சேனல்களுக்கு 'பிரஸ்' கிடையாது: மத்திய அரசு


யூடியூப் சேனல்கள் ‘PRESS’ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இணை அமைச்சர் கர்னல் ராஜவர்த்தன்சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் மக்கள் தொடர்பு அமைச்சகத்தில் பதிவு செய்து ஆர்.என்.ஐ-யில் பதிவு செய்துள்ள பிரிண்ட் மற்றும் எலக்ட்ரானிக் மீடியாக்கள், ரேடியோ நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் மட்டுமே செய்தியாளர்களாக அங்கீகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அடையாள அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூப் சேனல்களில் பணிபுரிபவர்கள் செய்தியாளராக அங்கீகரிக்கப்படுவதில்லை என்றும், அவர்கள் PRESS என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு PRESS என்ற வார்த்தையை பயன்படுத்தினால் அது சட்டப்படி குற்றம் எனவும், போலியாக செயல்படுவோர்கள் மீது காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Top Post Ad

Below Post Ad