மிசோரி மாநிலம் கான்சாஸ் நகரில் தன்னார்வ கால்நடை பராமரிப்பு அமைப்பு ஒன்று முகத்தில் வால் உடைய நாய்க்குட்டி ஒன்றை கண்டெடுத்து பராமரித்து வருகிறது. இந்த நாய்க்கு நார்வால் என பெயரிடப்பட்டுள்ளது. நார்வால் என்பது ஆர்க்டிக் கடலில் வாழும் முன்புறம் தந்தம் கொண்ட ஒருவகை திமிங்கலம். மேலும் இந்த வால் இருப்பதால் நாய்க்கு எந்த பிரச்னையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.