Type Here to Get Search Results !

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு ....

    அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

1. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி
2. பாபர் மசூதி இருந்த இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியத்திற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க உத்தரவு
3. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 3 மாதத்திற்குள் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும்
4. மத்திய அரசு உருவாக்கும் அறக்கட்டளை அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளை மேற்கொள்ள உத்தரவு
5) சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாராவின் மனுக்கள் தள்ளுபடி
6) கோவில் தரப்பிற்கு நிலத்தின் உரிமை வழங்கப்பட்டது, மசூதி தரப்பிற்கு மாற்று இடம் வழங்க உத்தரவிடப்பட்டது
7) சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரிய ராம்லல்லா அமைப்பின் மனுவை ஏற்று தீர்ப்பு


தினமணி செய்தி

அயோத்தியில் ராமஜென்மபூமியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகோராவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.

அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்திருப்பதே இந்த தீர்ப்பின் முக்கியம்சமாகும்.

அந்த தீர்ப்பில், அயோத்தியில் ராமஜென்மபூமி இடத்தில் ராமர் கோயில் கட்டலாம்.

இதுவரை சர்ச்சைக்குரியதாக இருந்த அயோத்தி ராமஜென்மபூமி இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு இன்னும் மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும்.

மத்திய அரசு உருவாக்கும் அறக்கட்டளை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க..அயோத்தி விவகாரம்: வெறுமனே, கடந்து வந்த பாதை என்று எப்படி சொல்லிவிட முடியும்?

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை புதிதாக ஏற்படுத்த உள்ள அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே தீர்ப்பில், ராமர் கோயில் கட்டுவது தொடர்பான முக்கியம்சமாக உள்ளது.

அயோத்தி வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு: தலைமை நீதிபதி அறிவிப்பு! தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் உடனுக்குடன்!!

வழக்கின் பின்னணி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபா் மசூதி அமைந்திருந்த சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிா்மோஹி அகாரா, மூலவா் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது.

அந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்தது.

இந்த விவகாரத்தில் சமரசத் தீா்வு காண்பதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் நியமித்தது. அந்தக் குழுவின் சமரசப் பேச்சுவாா்த்தையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வந்தது. அனைத்து வாதங்களையும் அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தொடா்ந்து 40 நாள்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அக்டோபா் 16-ஆம் தேதியுடன் இறுதிவாதங்கள் நிறைவடைந்தன.

அன்றைய தினம், உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்த குழு, சமரசப் பேச்சுவாா்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவுகளையும், தீா்வுகளையும் அறிக்கையாக முத்திரையிட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதைத் தொடா்ந்து, சன்னி வக்ஃபு வாரியம் சில நிபந்தனைகளின் பேரில், நிலத்தின் மீது உரிமைகோருவதை விட்டுக் கொடுக்க சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகின. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பா் 17-ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறாா். எனவே, அதற்குள்ளாக இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

விகடன் செய்தி

அயோத்தி நிலம்! - 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன?

பாபர் மசூதியின் வரலாறு 1528-ல் தொடங்கி பல சர்ச்சைகள், கலவரங்கள் என அனைத்தையும் தாண்டி 2019-ம் ஆண்டு வரை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

* பாபரின் தளபதி மிர் பாகி என்பவர் அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டினார்.

* இந்துக் கோயிலை இடித்துவிட்டுக் கட்டியதாக எந்தத் தகவலும் இல்லை.

* 325 ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

* பாபர் மசூதி கட்டப்பட்டபோது, அங்கிருந்த இந்துக் கோயில் இடிக்கப்பட்டதாகச் சிலர் பிரச்னையைக் கிளப்பினர்.

* பதற்றம் அதிகரிக்கவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மசூதியைச் சுற்றி வேலி அமைத்தனர்.

* மசூதிக்கு உள்ளே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தவும், வெளியில் இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.

* மஹந்த் ரகுபீர் தாஸ் என்பவர் ராமருக்குக் கோயில் எழுப்ப அனுமதிக்கக் கோரி ஃபரிதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

* சில இந்துக்கள் பாபர் மசூதியின் உள்ளே ராமர் சிலையை வைத்தனர்.

* `பாபர் மசூதி உள்ள இடம் பிரச்னைக்கு உரியது’ எனக் கூறி இரு தரப்பினரும் உள்ளே நுழைய மாநில அரசு அனுமதி மறுத்தது.

* கோபால்சிங் விஷாரத் மற்றும் ராமச்சந்திரதாஸ், ராமர் பிறந்ததாகக் கருதப்படும் இடத்தில் நிறுவப்பட்டுள்ள ராமர் சிலைக்குப் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்று அனுமதி வழங்கப்பட்டது.

* நிர்மோஹி அகாரா என்ற சாதுக்களின் அமைப்பு, `ராமர் பிறந்ததாகக் கருதப்படும் இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும்’ என்று புதிதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

* சன்னி சென்ட்ரல் போர்ட், ‘மசூதிக்குள் உள்ள சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும். மசூதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் எங்களுக்கே சொந்தம்’ என்று மனுத் தாக்கல் செய்தது.

*பிரச்னைக்குரிய இடத்தில் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோயில் கட்டப்போவதாக இந்துக் குழுக்கள் அறிவித்தன. கோயில் கட்டுவதற்காக மிகப் பெரிய இயக்கம் உருவெடுத்தது. இதில் பா.ஜ.க தலைவர் அத்வானி முக்கியப் பங்குவகித்தார்.

* `பாபர் மசூதி கதவுகள் திறக்கப்பட வேண்டும். இந்துக்கள் அங்கு வழிபட அனுமதிக்கப்பட வேண்டும்’ என்ற ஹரிசங்கர் துபேவின் மனுவை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு, இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

* பாபர் மசூதி ஆக்ஷன் கமிட்டி உருவாக்கப்பட்டது.

* பாபர் மசூதி அருகே ராமர் கோயில் கட்ட விஷ்வ இந்து பரிஷத் அடிக்கல் நாட்டியது.

* இதுவரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு, உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

* வி.ஹெச்.பி (விஷ்வ இந்து பரிஷத்) அமைப்பினர் மசூதியின் சில பகுதியைச் சேதப்படுத்தினர்.

* அதே ஆண்டில், செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலம் சோம்நாத்திலிருந்து அத்வானி, ரத யாத்திரையைத் தொடங்கினார்.

* நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது பா.ஜ.க.

* ரத யாத்திரையின் பலனாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியையும் கைப்பற்றியது.

* இதைத்தொடர்ந்து, கோயில்கட்ட கரசேவை இயக்கம் தொடங்கப்பட்டது.

* டிசம்பர் 6, கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

* இதனால் நாடெங்கும் கலவரம் வெடித்தது. இதில், 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.

* இதன் பின்னணியை விசாரிக்க அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ், லிபரான் ஆணையத்தை அமைத்தார்.

* பாபர் மசூதி இருந்த பகுதியில் 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது.

* அத்வானி உள்ளிட்ட சில தலைவர்கள்மீது சதி திட்டம் தீட்டியதாக சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

* பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சி.பி.ஐ நீதிமன்றம் 21 பேரை விடுதலை செய்தது.

* அப்போது அத்வானி உள்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

* உயர் நீதிமன்றம், பாபர் மசூதி இருந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து, அங்கு இந்துக் கோயில் இருந்ததா என்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யும்படி ‘ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியா’வுக்கு உத்தரவிட்டது.

* அலகாபாத் உயர் நீதிமன்றம், மத்திய அரசு கையகப்படுத்திய இடத்தில் மூன்றில் இரண்டு பகுதி நிலத்தை ராமர் கோயில் கட்டவும், மீதமுள்ள ஒரு பகுதி நிலத்தை இஸ்லாமியர்களுக்கும் வழங்க உத்தரவிட்டது.

* அத்வானி உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரி உத்தரவிட்ட ரேபரேலி உயர் நீதிமன்ற தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

* பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவில், ``ஒரு வழக்கை முழுமையாக விசாரிக்காமல் `கால தாமதம்’ என்பது போன்ற `டெக்னிக்கல்’ காரணங்களின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

* `பாபர் மசூதி இடிப்பு சதியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது’ என்று சி.பி.ஐ திட்டவட்டமாகக் கூறியது.

* ‘இது தொடர்பாக மிக விரிவாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

* `அத்வானி உள்ளிட்டோரின் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறிய உச்ச நீதிமன்றம், ரேபரேலியில் நடந்துவந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கை அரசியல் அமைப்புச் சட்டம் 142 விதியின் கீழ், லக்னோவுக்கு மாற்ற உத்தரவிட்டது.

* அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிடப்பட்டது. தினந்தோறும் விசாரணை நடத்தி, இரண்டாண்டுகளுக்குள் வழக்கை முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ சிறப்பு நீதிமன்றம். பிறகு, ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீது சதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஆகஸ்ட் 8:

ஷியா மத்திய வக்ஃப் போர்டு உச்ச நீதிமன்றத்திடம், `அயோத்தியாவில் சர்ச்சைக்குரிய இடத்தை விட்டு விட்டுச் சற்று தள்ளி இஸ்லாமியர்கள் நிறைந்த மற்றோர் இடத்தில் மசூதி கட்டிக் கொள்கிறோம்” என்று வாக்குமூலம் ஒன்றைச் சமர்ப்பித்தது.

பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி குறித்த 13 முறையீடுகள் டிசம்பர் 5-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 8-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது. அதன்பின், 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வுக்கு இவ்வழக்கை மாற்றியது உச்ச நீதிமன்றம்.

2018 அக்டோபர் 29-ம் தேதி, 3 நீதிபதிகள் அமர்வுக்குக் கீழ் வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை, மீண்டும் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

2019

ஜனவரி 10

நீதிபதி லலித் வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொண்டார்.

ஜனவரி 25

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எஸ்ஏ பாப்டே, சந்திரசவுட், அசோக் பூஷன், எஸ்ஏ நஷீர் ஆகியோர் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டது.

மார்ச் 8

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது.

ஆகஸ்ட் 6

6ம் தேதி முதல் அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் விசாரணை நடத்தியது.

அக்டோபர் 15

வழக்கு விசாரணையை அக்டோபர் 16ஆம் தேதியுடன் நிறைவு செய்ய விரும்புவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அக்டோபர் 16

அக்டோபர் 16ம் தேதியோடு வழக்கு விசாரணை நிறைவுபெற்றது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நவம்பர் 9

காலை 10:30 மணி அளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. `சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதற்காக புதிய அறக்கட்டளை ஒன்றை  மத்திய அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அயோத்தியில் வக்பு வாரியம் அமைந்துள்ள இடத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



Top Post Ad

Below Post Ad