Type Here to Get Search Results !

மானியம் இல்லா சமையல் சிலிண்டர் விலை உயர்கிறது



புத்தாண்டு தினத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14புள்ளி 2 கிலோ எடை உள்ள சிலிண்டரின் விலை 19 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அதன் விலை 734 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போன்று ஜெட் எரிபொருள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் இது 3 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் 2 புள்ளி 65 சதவிகிதம் அதிகரித்து கிலோ லிட்டருக்கு 66 ஆயிரத்து 226 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  விமானங்களில் பயன்படுத்தப்படும் டர்பைன் எரிபொருளின் விலையும் 2 புள்ளி 61 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணைய் விலை உயர்வே இதற்கு காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன

Top Post Ad

Below Post Ad