Type Here to Get Search Results !

சென்னையில் ஜன.19-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்



சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 19-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. 
 இளம்பிள்ளைவாத நோயைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு போலியோ பாதிப்பு எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படவில்லை. எனினும், போலியோ நோய்க் கிருமியின் தாக்கம் இனியும் தமிழகத்தில் அறவே வரக்கூடாது என்பதற்காகக் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
 தமிழகம் முழுவதும் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள போலியோ முகாம்கள் மூலம் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களை அமைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 சென்னையில், பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 7.03 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக 1,645 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து முகாமை பயன்படுத்தி பயனடையுமாறு பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

Top Post Ad

Below Post Ad