Type Here to Get Search Results !

மக்கள்தொகை கணக்கெடுப்பில் வாகனம், செல்லிடப்பேசி எண் உள்பட 31 கேள்விகள்

மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது வீட்டில் உள்ள கழிப்பறைகள், தொலைக்காட்சி, இணைய வசதி, வாகனங்கள், குடும்பத் தலைவரின் செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட 31 விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.
 இதுதொடா்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவாளா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் வீடுகள்தோறும் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் 31 கேள்விகளை கேட்குமாறு மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. செல்லிடப்பேசி எண் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்புடைய தகவல்கள் பரிமாற்றத்துக்கு மட்டுமே கேட்கப்படவுள்ளன.
 தொலைபேசி இணைப்பு, காா், இருசக்கர வாகனங்கள், மிதிவண்டி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி அல்லது கணினி, இணைய வசதி, வீட்டு எண் உள்ளிட்ட விவரங்கள் ஒவ்வொரு வீட்டிலும் சேகரிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 2021 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் செல்லிடப்பேசி செயலி மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.

 இந்த ஆண்டு செப்டம்பா் மாதத்துக்குள் தேசிய மக்கள்தொகை பதிவேடு பணிகளும் முடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Top Post Ad

Below Post Ad