Type Here to Get Search Results !

ஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய அனைத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

ஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவு, வரும் மார்ச் மாதத்தில் இருந்து அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்று திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டு ஆளுக்கு ஒரு டெபிட் கார்டை வங்கிகள் கொடுத்துவிட்டன. வங்கிக் கணக்கை வைத்து என்ன செய்வது என்று கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அதைப் பயன்படுத்துவதே இல்லை. மினிமம் பேலன்ஸ் வைத்தில்லை என்று கூறி கிராமப்புற மக்களிடமிருந்து கோடிக் கணக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில், இதுவரை பயன்படுத்தப்படாத டெபிட் மற்றும் டெபிட் கார்டுகளை ரத்து செய்துவிடும்படி ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் புதிய வழிகாட்டுதலை அனுப்பியுள்ளது. டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டிலிருந்து ஆன்லைன் பரிவர்த்தனை வசதி நீக்கப்பட்டு விட்டால் அதன் பிறகு விண்ணப்பம் அளித்தே அந்த வசதியை பெற முடியும். ஆன்லைன் பரிவர்த்தனைக்கு கார்டுகளை பயன்படுத்தாதவர்கள் பெரும்பாலும் ஊரக பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இத்தகைய கார்டு விவரங்களை திருடியே மோசடி நடைபெறுவதால் அதனை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுக்க மொத்தம் 80 கோடி டெபிட் கார்டுகளும், 5 கோடி கிரெடிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி சமீபத்தில் அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளும் மேக்னட் ஸ்டிரிப்புக்கு பதில் சிப் அடிப்படையிலான தாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனால், ஒரு முறை கூட பயன்படத்தாத கார்டுகளைக் கூட வங்கிகள் மாற்றித் தர வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது இந்த புதிய உத்தரவு மூலம் ஒரு முறை கூட பயன்படுத்தப்படாத கார்டுகள் நீக்கப்பட்டு, பயன்படுத்திய கார்டுகளுக்கு மட்டும் சிப் அடிப்படையிலான கார்டுகள் வழங்கப்படும். இதன் மூலம், ஆன்லைன் மோசடிகள் தவிர்க்கப்படும் என்று நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

Top Post Ad

Below Post Ad