திருமலா, உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு கட்டணத்தில் தரிசனத்துக்கு செல்பவர்கள், நடை பயணமாக செல்பவர்களுக்கு என குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக கமிட்டி இந்த ஆண்டு (2020) முதல் புத்தாண்டு பரிசாக ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் 175 கிராம் எடையுள்ள லட்டை இலவசமாக வழங்க முடிவு செய்து உள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது.