கொரோனா வைரஸ் எதிரொலியாக தொலைக்காட்சி தயாரிப்புக்குத் தேவையான முக்கிய உதிரிபாகமான டிவி பேனல்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியவில்லை. இதானல் மார்ச் மாதம் முதல் இந்தியாவில் டிவி விலை 10% அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.