Type Here to Get Search Results !

இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது' பட்டியலில் உங்கள் போன் இருந்தால் என்ன செய்வது?


ஒவ்வொரு நாளும் வாட்ஸ்அப்-பின் பயனாளர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள். தொடர்ந்து, புதுப்புது அப்டேட்டுகளையும் வெளியிட்டு வந்தது வாட்ஸ்அப் நிறுவனம்.



இந்நிலையில், இந்த பிப்ரவரியிலிருந்து சில குறிப்பிட்ட மொபைல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளம் மற்றும் அதற்குக் கீழான இயங்குதளங்களில் இயங்கும் ஆண்ட்ராய்டு போன்களிலும், iOS 8 மற்றும் அதற்கும் கீழான iOS இயங்குதளங்களில் இயங்கும் ஐபோன்களிலும் வாட்ஸ்அப் இயங்காது என்று அறிவித்தது. பெரும்பாலானவர்கள், இதைவிட அப்டேட்டட் ஓஎஸ்தான் வைத்திருப்பர் என்பதால், பயனர்கள் பெருமளவில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் கூறியுள்ளது வாட்ஸ்அப். வருடாவருடம் இப்படி பழைய போன்களுக்கு சப்போர்ட்டை நிறுத்துவது வாட்ஸ்அப்பின் வழக்கம். ஏற்கெனவே, விண்டோஸ் போன்களுக்கு வாட்ஸ்அப் சப்போர்ட்டை நிறுத்திக்கொண்டது.

இந்த இயங்குதளங்களில் வாட்ஸ்அப் இயங்காது<=ஆண்ட்ராய்டு 2.3.7, iOS 8

அப் இயங்காது<=ஆண்ட்ராய்டு 2.3.7, iOS 8
ஒருவேளை, நீங்கள் இன்னும் மேற்குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் வெர்ஷன் மொபைல்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தினால், உங்கள் மெசேஜ்களை தனியாக பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதற்கு, Settings->Chat->Set Backup சென்றால் போதும்.


Top Post Ad

Below Post Ad