Type Here to Get Search Results !

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு வருவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை

கொரோனா வைரஸ் பீதி காரணமாக, மெக்கா, மதீனா வருவதற்கு தடை விதித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.nsmimg756388nsmimgசீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், ஹாங்காங், தைவான், தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ருமேனியா, நார்வே, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது.nsmimg756389nsmimgமத்திய கிழக்கு நாடுகளில், 220 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய புனித தலமான மெக்கா மற்றும் மதீனாவுக்கு வருகை தரும் பயணியருக்கு, அந்நாட்டு அரசு, தற்காலிக தடை விதித்துள்ளது. ஹஜ் புனித பயணம் துவங்க, சில மாதங்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு, முஸ்லிம் மக்கள் இடையே, கவலையை ஏற்படுத்தி உள்ளது.


Top Post Ad

Below Post Ad