Type Here to Get Search Results !

மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது





தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின், 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' நாவல் மொழிபெயர்ப்புக்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள முக்கியமான 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 2019-ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் சோ.தர்மன் தேர்வு செய்யப்பட்டார். அவர் எழுதிய 'சூல்' என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற நாவலை கே.வி.ஜெயஸ்ரீ மிகச் சிறப்பாக தமிழில் மொழி பெயர்த்திருந்தார்.

வம்சி' பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டது.சங்க காலப் பாணர், கூத்தர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் இந்நாவல், பாரியின் படுகொலையைக் கதைக்களனாகக் கொண்டது. இந்த நாவலை சிறப்பாக மொழிபெயர்த்த எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ரூ.50 ஆயிரம் ரொக்கமும், செம்புப் பட்டயமும் விருதாக அளிக்கப்படும். விருது வழங்கப்படும் நாள் அறிவிக்கப்படவில்லை.இவருக்கு எழுத்தாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், 'சிறந்த மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள கே.வி.ஜெயஸ்ரீக்கு வாழ்த்துகள். அவரது மொழிபெயர்ப்புப் பணி தொடரட்டும்' என, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Top Post Ad

Below Post Ad