Type Here to Get Search Results !

தமிழக மின்வாரியத்தில் (TNEB) வேலை - விண்ணப்பிக்கத் தயாரா?


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) உதவி பொறியாளர் பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய புதிய அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) 2. உதவி பொறியாளர் (மெக்கானிக்கல்) 3. உதவி பொறியாளர் (சிவில்)
காலிப்பணியிடங்கள்: 1. உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) - 400 2. உதவி பொறியாளர் (மெக்கானிக்கல்) - 125 3. உதவி பொறியாளர் (சிவில்) - 75



மொத்தம் = 600 காலியிடங்கள்
முக்கிய தேதிகள்: அறிவிப்பாணை வெளியான தேதி: 15.02.2020
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள்: 15.02.2020 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2020 ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 16.03.2020 ஆப்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 19.03.2020 தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தகவல்.

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்) 1) எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள் - 18 வயது முதல் 35 வயது வரை 2) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 18 வயது முதல் 32 வயது வரை 3) பொது பிரிவினர் - 18 வயது முதல் 30 வயது வரை

தேர்வுக்கட்டணம்: 1) எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் - ரூ.500 + ஜிஎஸ்டி 2) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொது பிரிவினர் - ரூ.1,000 + ஜிஎஸ்டி.

கல்வித்தகுதி: உதவி பொறியாளர் - பி.இ (B.E - EEE / ECE / EIE / CSE / IT / Mechanical / Civil ) அல்லது அதற்கிணையான AMIE (எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / சிவில்) - போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tangedco.gov.in/ அல்லது https://www.tangedco.gov.in/asssistantenginerr2020.html - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, https://www.tangedco.gov.in/linkpdf/AE_NOTIFICATION_%20FINAL_PDF.pdf என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.

Source Puthiya Thalaimurai

Top Post Ad

Below Post Ad