ஏ.டி.எம்மில் கார்டை பயன்படுத்தும்போது தகவல்களை திருடி, அந்த கார்டுகளை குளோன் செய்து, வாடிக்கையாளர்களின் பணத்தை திருடுவதாக 9 வழக்குகள் பதிவாகியுள்ளது.
ஏ.டி.எம் கார்டுகளில் இஎம்வி சிப் பொருத்தப்பட்டும் இந்த மோசடி நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் திருடுபோனவர்களிடம், வங்கிகள், 10 நாட்களுக்குள் வட்டியுடன் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.