Type Here to Get Search Results !

RBI Governor Announcement | 3 மாதங்கள் EMI செலுத்த தேவையில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர்


கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து வகையான கடன் வசூல்களை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் கூலித் தொழிலாளர்கள், அமைப்புச் சாரா தொழிலாளர்களின் நலத்திட்டங்களுக்கு பிரதம மந்திரியில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சலுகை தொகுப்பு ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்தா தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், குறுகிய கால கடனுக்கான வட்டி 0.75% குறைக்கப்பட்டுள்ளது.


ரெப்போ வட்டி விகிதம் 5.15 விழுக்காட்டில் இருந்து 4.4 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டுக் கடன் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.
  கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதார இழப்பை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இந்த இழப்பை சரிகட்ட 4 அம்ச திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.மேலும், அனைத்துவகையான கடன் வசூலை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 3 மாதங்கள் இ.எம்.ஐ செலுத்த தேவையில்லை.

கடன் செலுத்தவில்லை என்பதற்காக திவால் நடவடிக்கை கூடாது. மற்றும் சிபெல் மதிப்பெண்ணை குறைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

Top Post Ad

Below Post Ad