வாட்ஸ்அப் செயலியானது உலகம் முழுவதும் அதிகம் பேர் பயன்படுத்தக் கூடிய முதன்மை தகவல் தொடர்பு செயலியாக உள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் வசமுள்ளவாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது பயனர்களின் வசதிக்காக புதிய அம்சங்கள் இணைக்கப்படும்.
சமீபத்தில் QR கோடு மூலம் புதியவர்களை உள்ளே இணைக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டது. மேலும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் பணப்பறிமாற்ற வசதியும் விரைவில் கொண்டு வரப்பட இருக்கிறது.
இந்த நிலையில், தேவையற்ற அல்லது முக்கியத்துவம் இல்லாத சாட்களை நிரந்தரமாக மியூட் செய்து வைக்கும் அம்சம் புதிதாக இணைக்கப்பட உள்ளது. தற்போது, 8 மணிநேரம், ஒரு வாரம் மற்றும் ஓராண்டுக்கு ஒரு சாட்-ஐ மியூட் செய்து வைக்கலாம்.
மியூட் வசதி
மியூட் செய்வதால் அந்த சாட்டில் புதிய மெசேஜ் வரும் போது, நோடிபிகேஷன் காட்டாது. குரூப் சாட்டிங்கிற்கும் இந்த மியூட் வசதி இருந்தது.