தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் வேறு சில குறிப்பிட்ட பணிகளுக்கும்
1-9-2020 (நாளை) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது
உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதனை தொடர்ந்து, தமிழகத்தில் பூங்காக்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,
* பூங்காக்களுக்கு வருவோர் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம்.
* உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே பூங்காக்களில் நுழைய அனுமதி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.