சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல் கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.
இதில் மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.