கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ, ஊர்வலம் செல்ல தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது
கரோனா காலத்தில் பொதுமக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடக்கூடாது என்பதால், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.