இந்த வருட ஐபிஎல் போட்டி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையாகக் காணலாம். ஆனால் அதற்கு நீங்கள் சந்தாதாரராக இருக்கவேண்டும். ஹாட்ஸ்டாரில் விஐபி சந்தா என ஒரு பிரிவு உள்ளது. அதில் இணைந்துகொள்ள வருடத்துக்கு ரூ. 1499 தொகை செலுத்த வேண்டும். ஐபிஎல் போட்டி நடக்கும் 2 மாதங்களுக்கு மட்டும் போதும் என்றால் ரூ. 498 தொகை செலுத்தவேண்டும்.
Source Dinamani