Type Here to Get Search Results !

நாவறட்சியை போக்கும் வெள்ளரி


ஒவ்வொரு பருவ காலகட்டத்திலும் ஒவ்வொரு காய்கறி இயற்கையாகவே கிடைக்கும். அக் காய்கறிகள் மனித குலத்திற்கு நன்மை பயக்கும் விதமாக அமையும். அவ் வகையில் வெள்ளரிக்காய் கோடை காலத்தில் காயாகவும், பழமாகவும் கிடைக்கும். 

அமிர்தா யோக மந்திரம் இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் கூறுகையில், வெள்ளரிக்காய்  நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை போக்கும் தன்மையுடையது. பசியை தூண்டும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில்  சோடியம், கால்சியம், மக்னிசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் உள்ளன. 
 நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவதை குறைக்கவும்.   வெள்ளரிக்காயை பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடலாம்.
வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது.  நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப்பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்த உதவும்
100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. உணவில் உள்ள காரத்தை கட்டுப்படுத்தி  அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ ஆகியவை உள்ளன.  வெள்ளரிக்காயைப் பச்சையாக உண்ணலாம். 
வெள்ளரிக்காயைச் சமைத்துச் சாப்பிடும்போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடும் 
வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு வெள்ளரிக்காய் உதவும்.

 வெள்ளரிக்காய் கிடைக்கும் காலத்தில் தினமும் வெள்ளரி சாப்பிட்டால் வறட்சித் தன்மையைப் போக்கலாம்.
 நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் எனவே அந்தந்த பருவ காலத்தில் கிடைக்கும் இயற்கை காய்கறிகளையும் பழங்களையும் உண்டால் உடல் உறுதியாகும் என்றார்.

Top Post Ad

Below Post Ad