பல் பரிசோதனைகளைத் தள்ளிவைக்கும்படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்
கொரோனா நோய்ப் பரவல் கட்டுக்குள் வரும்வரை வழக்கமாகச் செய்துகொள்ளும் பல் பரிசோதனைகளைத் தள்ளிவைக்கும்படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பல் பரிசோதனைகள், பற்களைச் சுத்தம் செய்தல், பராமரிப்பு ஆகியவற்றை ஒத்திவைக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளது.
பல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது கொரோனா கிருமி பரவுவதற்கான சாத்தியம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும், சிறிய நுண்ணுயிர்களை சுவாசிப்பதன் மூலம் தொற்று ஏற்படுமா என்பதை இன்னும் ஆழமாக ஆராய, உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது..