Type Here to Get Search Results !

தமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு

உலக  அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட்டது. அதில் ஒரு பகுதியாக பள்ளிகள் முதற்கட்டமாக செப்டம்பர் 21 முதல் திறக்க அனுமதிக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. அதில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில் பள்ளிக்கு வர செப்.21 முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.


இந்நிலையில் தமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்படுவதாக தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் விருப்பத்தின் பேரில் மாணவர்கள் செல்லலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வரும் 28ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Top Post Ad

Below Post Ad