Type Here to Get Search Results !

'காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ரயில்கள் இயக்கப்படும்!' வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.

சென்னையில் செப் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில்
சேவை - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்!

விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில்
செப் 7-ம் தேதியும், பரங்கிமலை - செண்ட்ரல் வழித்தடத்தில்
வரும் 9ம் தேதியும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்


காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்
இயக்கப்படும்; 

பிளாட்பாரம் மற்றும் ரயிலில் 6 அடி இடைவெளியை பயணிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி
வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்;

மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்
மெட்ரோ ரயில், நிலையங்களுக்குள் முகக்கவசம் அணிவது
கட்டாயம்; தெர்மல் ஸ்கேனர்களை கொண்டு பயணிகளுக்கு
ரயில்நிலைய நுழைவாயில்களில் சோதனை நடத்தப்படும்

Top Post Ad

Below Post Ad