Type Here to Get Search Results !

தினம் ஒரு குட்டிக்கதை. பால.ரமேஷ். தாயின் அன்பு

கடைக்கு சென்ற அம்மா நான்கு பிஸ்கட்டுகள் வாங்கி வந்தாள். அதில் இரண்டு பிஸ்கட்டை குழந்தையிடமும், ஒரு பிஸ்கட்டை கணவரிடமும் சாப்பிட கொடுத்தாள். மீதமிருந்த ஒரு பிஸ்கட்டை பாதியாக உடைத்து சாப்பிட ஆரம்பித்தாள். வெளியே பிஸ்கட்டுடன் சென்ற குழந்தை ஒரு பிஸ்கட்டை சாப்பிட்டு முடித்து விட்டு, அடுத்த பிஸ்கட்டை சாப்பிட ஆரம்பிக்கும் போது அது கீழே விழுந்தது. உடனே அந்த குழந்தை அம்மாவிடம் போய் என் பிஸ்கட்டு கீழே விழுந்திருச்சு எனக்கு வேற பிஸ்கட்டு வேணும் என அழ ஆரம்பித்தது. 

அப்போது தான் அம்மா தன்னிடமிருந்த கடைசி பிஸ்கட்டை வாயில் போட்டு மெள்ள ஆரம்பித்திருந்தாள். குழந்தை பிஸ்கட்டு கேட்டு தொடர்ந்து அடம் பிடித்து அழ ஆரம்பித்தது. அம்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

உடனே தன் குழந்தையை பக்கத்தில் அழைத்து வாயோடு வாய் வைத்து ஒரு தாய்க்குருவி தன் குஞ்சுகளுக்கு உணவை ஊட்டுவது போல தன் வாயிலிருந்த பிஸ்கட்டை குழந்தையின் வாய்க்கு ஊட்டினாள். குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு சாப்பிட ஆரம்பித்தது. இதைப் பார்த்த கணவரின் உடம்பெல்லாம் சிலிர்த்து போனது. அம்மாவின் கருணை உள்ளம் யாருக்கு வரும். அம்மா, அம்மா தான் அம்மாவுக்கு ஈடு இணை உலகில் யாருமே இல்லை.

Top Post Ad

Below Post Ad