தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், மதுரை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாமக்கல், சிவகங்கை, விருதுநகர், திருச்சி, பெரம்பலூர், மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோன்று நீலகிரி, கோவை, புதுச்சேரியிலும் வளிமண்டல சுழற்சியால் இடியுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் அடுத்த அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 28-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source Dinamani