❖ செல்போன் செயலிகளில் டிஜிட்டல் வடிவில் உள்ள ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று, பெர்மிட்டுகள், இன்சூரன்ஸ், மாசுக் கட்டுப்பாட்டு சான்று உள்ளிட்டவற்றை ஏற்குமாறு மத்திய அரசு கடந்த ஆண்டே அறிவுறுத்தியிருந்தது. இதற்கேற்றவாறு மோட்டார் வாகன விதிகளை மத்திய அரசு தற்போது திருத்தியுள்ளது.
❖ டிரைவிங் லைசன்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் காப்பி உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எம்-பரிவாகன் அல்லது டிஜிலாக்கர் ஆப்களில் அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்து தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தலாம்.