பெரிய வெங்காயம் வரத்து
குறைந்துவிட்டதால் அதன்
விலை தொடர்ந்து ஏறுமுகத்தில்
உள்ளது. இன்னும் 10 நாட்களில்
வெங்காயத்தின் விலை கிலோ
ரூ.120-ஐ தொடும் என்கின்றனர்
மொத்த விற்பனையாளர்கள்.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 100 முதல் 110 வரை விற்பனையாகிறது. ரூ. 80க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை மேலும் 20 முதல் 30 வரை உயர்ந்துள்ளது. தொடர் மழையால் ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரத்து குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.
டிசம்பர் வரை விலை உயர்வு
தற்போது ஏற்றுமதிக்கு தடை
உள்ளதால் இதுவரை பெரிய
அளவில் விலை ஏறவில்லை.
இருப்பினும் இன்னும் 10
நாட்களில் சில்லறை விலையில்
பெரிய வெங்காயம் கிலோ ரூ.
120-ஐஎட்டும். இந்த விலை உயர்வு
டிசம்பர் மாதம் வரை இருக்கும்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் தான்
விலை குறைய வாய்ப்புள்ளது.