சென்னை: 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவந்த நிவர் புயல் தற்போது அதிதீவிர புயலாக மாறி 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நரகத்து கொண்டிருக்கிறது. கடலூரில் இருந்து 90 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. சென்னையில் இருந்து 220 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 150 கி.மீ.தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.