Type Here to Get Search Results !

‘நிச்சயமாக இல்லை’: ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்த எம்.எஸ். டோனி

வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது இதுதான் கடைசி போட்டியாக இருக்குமா? என்ற கேள்விக்கு எம்எஸ் தோனி பதில் அளித்துள்ளார்.


ஐபிஎல் தொடரின் 53-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஆட்டம் அபு தாபியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை அணி கேப்டன் தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
டாஸ் சுண்டியபோது வர்ணனையாளர் டேனி மோரிஸ்சன் சிஎஸ்கே-வுக்கான கடைசி போட்டியாக இது இருக்குமா? என்று டோனியை பார்த்து கேட்டார்.
அதற்கு எம்எஸ் டோனி நிச்சயமாக இல்லை! (Definitely Not!) எனப் பதில் அளித்தார். இதில் இருந்து எம்எஸ் டோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் டோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்பதை உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Top Post Ad

Below Post Ad