Type Here to Get Search Results !

மின்வாரியத்தில் தனியார் மூலம் நிரப்பப்பட உள்ள 30,000 காலிப் பணியிடங்கள்

மின்வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்கள் தனியார் மூலம் நிரப்பப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மின்வாரியத்தில் வயர் மேன், ஹெல்ப்பர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை தற்காலிக ஊழியர்களைக் கொண்டு நிரப்புவதும், அதன்பின்னர் அவர்கள் பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்யப்படுவதும் வழக்கமாகும்.
இந்நிலையில் மின்வாரியத்தில் உள்ள 30,000 காலிப் பணியிடங்கள் தனியார் மூலம் நிரப்பப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக மின்துறையில் இருந்து ஒவ்வொரு மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கும் ரூ.1.8 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அத்துடன் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் 20 பேரை தனியார் நிறுவனம் பணியமர்த்திக் கொள்ள அனுமதி அளித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள ஐ.டி.ஐ படித்த இளைஞர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Source Dinamani

Top Post Ad

Below Post Ad