சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 37 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கி, ரூ.36,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்திற்குப் பின் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.
இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.496 குறைந்து, ரூ.36,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.62 குறைந்து, ரூ.4,622 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 குறைந்து, ரூ.66.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 குறைந்து, ரூ.66,800 ஆகவும் உள்ளது.
வியாழக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்……………………….. 4,622
1 சவரன் தங்கம்………………………….36,976
1 கிராம் வெள்ளி………………………..66.80
1 கிலோ வெள்ளி………………………..66,800
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்……………………….. 4,684
1 சவரன் தங்கம்………………………….37,472
1 கிராம் வெள்ளி………………………..68.00
1 கிலோ வெள்ளி………………………..68,000