Type Here to Get Search Results !

கலப்படமில்லாத தேன்: ஜெர்மன் ஆய்வக சோதனையில் ஒரேஒரு இந்திய நிறுவனம் மட்டுமே தேர்ச்சி.

நம் மண்ணின் பாரம்பர்ய உணவுப் பொருள்களின் தேன் முக்கியமானது. இதை மருத்துவ ரீதியாகவும் உடலுக்கு சிற்ந்த பலனை தருகிறது.

`தேன்… உணவாகவும் மருந்தாகவும் பயன்படக்கூடிய பொக்கிஷம். இதைச் சாப்பிட்ட நான்கு மணி நேரத்தில் முழுமையாக செரிமானமாகிவிடுவதால் உடலில் சேர்ந்து பலத்தைக் கொடுக்கும் என்று சித்த மருத்துவ நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில் தேன் ஒரு மிகச் சிறந்த துணை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.


க லப்படமில்லாத சுத்தமான தேன் குறித்த ஆய்வக சோதனையில், இந்தியாவில் ஒரே ஒரு தேன் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது. பிரபலமான பதஞ்சலி, டாபர் உள்பட பல நிறுவனங்கள் தோல்வியை சந்தித்துள்ளன.


இதனால் மக்களிடையே சுத்தமான தேனுக்கு தனி மவுசு உள்ளது. இதை பல நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக்கி, தங்களுடையதுதான் உண்மையான தேன் என்று கூறி ஏமாற்றி வருகிறது.





இந்த நிலையில், சுத்தமான, கலப்படமில்லாத தேன் குறித்து, சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் சுற்றுச்சூழல் (சி.எஸ்.இ) தேனை கலப்படம் செய்வது குறித்து விசாரணை நடத்தி ஆய்வக சோதனைக்கு அனுப்பியது. ஜெர்மன் ஆய்வக சோதனைகளில் இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனங்களின் 13 தேன் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் ஒரேஒரு நிறுவனம் மட்டுமே தேர்ச்சிபெற்றுள்ளது. மற்ற அனைத்து நிறுவன தேன்களும் கலப்படமானது என்று உறுதி செய்துள்ளது.





இந்த ஆய்வுக்கு, டாபர் ஹனி (Dabur Honey), பதஞ்சலி தேன் ( Patanjali Honey), பைத்யநாத் தேன் ( Baidyanath Honey), ஜன்டு சுத்தத்தேன் ( Zandu Pure Honey), அபிஸ் ஹிமாலயன் (Apis Himalayan), ஹிட்கரி தேன் (Hitkari) உள்பட 13 நிறுவன தேன்கள் பயன்படுத்தப்பட்டது.





இதில்அபிஸ் ஹிமாலயன் (Apis Himalaya had passed lab tests in India) தேன் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது.



Top Post Ad

Below Post Ad