Type Here to Get Search Results !

ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி



குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம்.

ஆப் மூலமாக சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுக கட்டணம் என கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாக தகவல் வந்துள்ளது.

கடனை வசூலிக்கவும் ஆப் நிறுவனங்கள் மோசமான நடைமுறைகளை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது - ரிசர்வ் வங்கி.

அதிக வட்டி, மறைமுக கட்டணத்துடன் கடன் வழங்கும் ஆப்கள் குறித்து உடனடியாக காவல்துறையில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்-ரிசர்வ் வங்கி.

குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ஆர்பிஐ இணையதளத்தில் அறியலாம். அங்கீகாரமற்ற கடன் செயலிகள் குறித்து காவல்துறையிலோ (அ) sachet.rbi.org.in என்ற இணையதளத்திலோ புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Source Polimer News

Top Post Ad

Below Post Ad