Type Here to Get Search Results !

விவசாயிகளுக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட ‘கிசான்’ பேஸ்புக் பக்கம் முடக்கம்

விவசாயிகளுக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ என்ற பேஸ்புக் பக்கத்தை, அந்த நிறுவனம் திடீரென முடக்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும்நிலையில், போராட்ட நிகழ்வுகள் பொதுமக்களை சென்றடைய கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு விவசாய அமைப்பான ‘யுனைடெட் கிசான் மோர்ச்சா’ சார்பில், டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் ஸ்னாப் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களில் கணக்குகள் தொடங்கப்பட்டன.

போராட்டக் குழு தொடர்பான வதந்திகள் பரப்புவதை தடுக்கவும், போராட்டத்தை சரியான பாதையில் முன்னெடுத்து செல்வதற்காகவும் ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ என்ற வலைதள பக்கம் தொடங்கப்பட்டதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


இந்நிலையில், ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ பக்கத்தில் கடந்த 4 நாட்களில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்து, அவர்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். நேற்று வரை பேஸ்புக் பக்கத்தில் மட்டும் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த சமூக வலைதள பக்கத்தை பின்தொடர்ந்தனர்.

இதற்கிடையே நேற்று மாலை, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்பட்டது. ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும், யுனைடெட் கிசான் மோர்ச்சாவின் பக்கம் திடீரென முடக்கப்பட்டது.


அதிர்ச்சியடைந்த ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’  ஐடி குழு, பேஸ்புக் நிறுவனத்திடம் புகார் அளித்தது. அடுத்த சில மணி நேரங்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஓபன் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு விவசாய அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டது குறித்து இன்று, ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று விவசாய அமைப்பினர் தெரிவித்தனர்.


Top Post Ad

Below Post Ad