விந்தணுக்கள் உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் உடல் வெப்பநிலையை(37- 37.5 °C) விட 3°C முதல் 4°C குறைவான வெப்பநிலை அவசியம்.
அதனால் தான் ஆண்களுக்கு உயிரணுக்களை உற்பத்தி செய்யும் விரைப்பையை இயற்கை உடலுக்கு வெளியில் அமைத்துள்ளது.
இதனால் தான் அதிக நேரம் வெந்நீரில் இருப்பது, இறுக்கமான உள்ளாடை அணிவது வெப்பத்தை அதிகரித்து விந்தணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆண்கள் வெந்நீரில் அதிக நேரம் குளிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை, செயல்திறன் குறைய வாய்ப்புள்ளதாக கலிபோர்னியா பல்கலை., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஷவரை விட, குறிப்பாக குளியல் தொட்டிகளில் குளிப்பதால் இப்பாதிப்புகள் ஏற்படுகிறதாம். ஆறுதலான விஷயம், வெந்நீரில் குளிப்பதை நிறுத்திய சில மாதங்களின் இப்பாதிப்பு சரியாகி விடுமாம்.
ஆகவே, சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது, உடல் அசதியாக இருக்கையில் வெந்நீர் குளியல் போடலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.