*கடற்கரைகள், சாலைகளில் புத்தாண்டு
*கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை
அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜனவரி 1ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு அறிவித்துள்ளது. தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உணவகம் மட்டும் வழக்கம்போல் செயல்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தால் மக்கள் அதிகளவில் கூடினால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில வெளிநாடுகளில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் பரவி வரும் சூழலில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.