அடுத்த 2 நாட்களுக்கு தென் கடலோர மாவட்டங்களில் பெருமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி திருநெல்வேலி இராமநாதபுரம் திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.
கன்னியாகுமரி தென்காசி தேனி சிவகங்கை புதுக்கோட்டை தஞ்சாவூர் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
விருதுநகர் மதுரை திருச்சி கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி கரூர் பெரம்பலூர் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று இரவு கனமழை பெய்யும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை : மறு அறிவிப்பு வரும் வரை தமிழக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
தென் கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை : தூத்துக்குடி திருநெல்வேலி இராமநாதபுரம் தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை முதல் 2 நாட்களுக்கு இடைவிடாத மழை பெய்யும் என்பதால் யாரும் வெளியே செல்ல வேண்டாம்.