சேலம் மாவட்டம் வாழப்பாடி அண்ணா நகர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வெள்ளிக்கிழமை பள்ளிமேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு தலைமை ஆசிரியை ஷபீராபானு தலைமை வகித்தார். மேலாண்மை குழு தலைவி தெய்வானை முன்னிலை வகித்தார்.
ஆசிரியை புஷ்பா வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் சுரேஷ், ஆசிரியப்பயிற்றுநர் கந்தசாமி, கருத்தாளர் பெரியார்மன்னன் ஆகியோர் பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள், பெற்றோர்களின் கடமைகள், கரோனா தொற்று பரவலை தடுக்க கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.
கரோனா தொற்று பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தலைமையாசிரியை ஷபீராபானு, ஆசிரியைகள் புஷ்பா,, வாசுகி, சிவமகேஸ்வரி மற்றும் பெற்றோர்கள் சிலர் இணைந்து சிறு நாடகம் அரங்கேற்றினர். இந்த நாடகத்திற்கு மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.