தண்டமிழின் பேரழகாய்
தரணியில்
தனிச்சிறப்புமிக்க
தங்கப் பதுமைகள்!
தாழம்பூவாய் மணமிக்கதும்
தானென்ற அகந்தையில்லா
தாயந்தத்தை தீர்த்திடும்
தாயுள்ளம் படைத்தவர்கள்!
தியாகவுள்ளமிக்க
திடமனமிக்க
திருக்குறளாய் மேன்மைமிக்க
திரிபுரமல்லிகைகள்!
தீகனாய் அழகுமிக்க
தீவினைகளையும்
தீக்கிரையாக்கிட வந்த
தீயபுட்பங்கள்!
துகிர்த்தாளியாய்
துன்பம் தாக்காத வேலியாய்
துணிகரமிக்க பண்புள்ள
துத்தாத்திகள்!
தூக்குக்கோலாய்
நடுநிலையாளர்கள்
தூற்றுதலை வெறுக்கும்
மாங்கனிகள்
தூரியனாய் கண்முன்னே
தூய்மையின் வடிவங்கள்!
தெட்பத்தின் வல்லுநர்கள்
தெண்மையின்
ஔிச்சுடர்கள்
தெள்ளிதின் சுவைமிக்க தமிழாய்
தெய்வத்துதிகள்!
தேவதைகளாய்
தேவபாரிகளாய்
தேனமுதங்களாய்
தேவீகமிக்கவர்கள்!
தைத்தியகுருவாகவும்
தைத்தியதேவனாகவும்
தைவம் பெற்ற
தைரியலட்சுமிகள்!
தொடக்கம்முதல் இறுதிவரை
தொலைநோக்குப் பார்வையுடன்
தொல்லைதரக் கூடாதென வாழும்
தொம்பறைகள்!
தோல்வியின்போது
தோழன்தோழியாக
தோள்வலிமையாகத்
தோன்றும் தோகையர்கள்!
தௌதிகமாய் வீட்டில்
நாளும்
தௌசாரத்திலும்
வாழும்
தௌர்ப்பல்லியத்திலும்
வீழாத
தௌதசிலமாய் உலகில்
பெண் குழந்தைகளே!
வாழ்க!வாழ்க!வாழ்க!
பெண்குழந்தைகளே
பெருமையின் இலக்கணமென
ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்.