Type Here to Get Search Results !

செட்டிநாடு வத்தல் குழம்பு செய்வது எப்படி?

செட்டிநாடு வத்தல் குழம்பு


செட்டிநாடு செய்முறையில் சுவையான வத்தல் குழம்பு செய்வதற்கான எளிய குறிப்பு.

தேவையான பொருட்கள் :-

சின்ன வெங்காயம் – 200 கிராம்
வெள்ளைப்பூண்டு – 100 கிராம்
சுண்டை வத்தல் – 10
தக்காளி – 2
புளி – எலுமிச்சையளவு
குழம்பு மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

தாளிக்க :-
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1 /2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 /2 தேக்கரண்டி
சீரகம் – 1 /4 தேக்கரண்டி
மிளகு – 1 /4 தேக்கரண்டி
வெந்தயம் – 1 /4 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை :-

1.வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமாக அரிந்து கொள்ளவும்.

2.ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.

3.பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.

4.இதனுடன் குழம்பு மிளகாய்த்தூள், புளிக்கரைசல், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

5.கடைசியாக சிறிது எண்ணெயில் சுண்டைக்காய் வற்றலை பொறித்து குழம்பில் கொட்டவும்.
Tags

Top Post Ad

Below Post Ad